திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 13,632 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள கோலே சதுப்பு நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பானது மேற் கொள்ளப் பட்டது.
இங்கு ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகின்றன.
பறவைகளின் அதிகளவிலான எண்ணிக்கை மற்றும் அவற்றின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற ராம்சர் தளமான திருச்சூர்-பொன்னானி கோலே தளங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் முதல் நாளில், நீர்ப்பறவைகளின் எண்ணிக்கையானது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு 90 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 9,904 பறவைகள் இங்கு காணப் படுவதாகக் கணக்கிடப்பட்டன.
2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் பதிவான எண்ணிக்கைகள் முறையே 16,634 & 15,956 ஆக இருந்தது.
2018 ஆம் ஆண்டில் 33,499 ஆக இருந்த பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத் தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.