மேற்கு பிரான்சில் உள்ள லெஸ் சேப்லஸ் டிஓலோனே துறைமுகத்திலிருந்து தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க கோல்டன் உலகப் பந்தயத்தில் இந்திய கடற்படையின் கடற்படை அலுவலர் தளபதி அபிலாஷ் தாமி பங்கேற்கிறார்.
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கப்பலான, துரியா எனும் 1950-களில் இருந்த சுகாலி கப்பலை ஒத்த கடற்பயணம் செய்வதற்கான கப்பலுடன் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மாலுமிகளில் ஒருவரும் கீர்த்தி சக்ராவைப் பெற்றவருமான தாமி ஆசியாவிலிருந்து செல்லும் ஒரே பங்கேற்பாளர் ஆவார்.
ஒரு பெண் மாலுமியுடன் 18 பங்கேற்பாளர்கள் இந்த பந்தயத்தில் உள்ளனர். இந்த பந்தயம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லெஸ் சேப்லஸ் டிஓலோனேயில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி அபிலாஸ் தாமி 2012-13ல் நடைபெற்ற இடைநில்லாத உலகை சுற்றும் கடற் பயணத்தை இந்திய கடற்படை பயணக் கப்பலான மஹ்தேய் கப்பலில் 53,000 கடல் மைல்களை தனி ஒருவனாக கடந்து முடித்த ஒரே இந்தியன் ஆவார்.
கோல்டன் உலகப் பந்தயம்
இந்த கோல்டன் உலகப் பந்தயமானது UK-ன் சர் ராபின் நாக்ஸ் ஜான்ஸ்டன் என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது தனிமனிதனாக இடைநில்லாது உலகை சுற்றும் பயணத்தில் உலகில் மேற்கொண்ட முதல் பயணத்தின் 5௦ வருடங்கள் கழிந்ததை நினைவு கூர்வதற்காக நடத்தப்படுகிறது. இப்பயணம் 1968 -ம் ஆண்டில் இந்தியரால் கட்டப்பட்ட சுகாலி படகில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் போட்டியின் தனித்துவம் என்னவென்றால் 1968க்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட கப்பல் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த போட்டியில் இடம்பெற இயலாது.
இதனால் புவி இடங்காட்டி தகவல் அமைப்பு, செயற்கைக் கோள் தொடர்புகள், ஊடுருவல் உதவி மற்றும் பல உபகரணங்கள் இப்போட்டியில் தடை செய்யப்பட்டுள்ளன.