2022 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதினை வென்றவர்களின் பெயர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் அமெரிக்காவின் ஹாலிவுட் அயல்நாட்டுப் பத்திரிக்கைச் சங்கத்தினால் அறிவிக்கப் பட்டன.
இந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படாமல் (அ) நேரலையில் வெளியிடப்படாமல் எந்தவொரு தொகுப்பாளரும் அல்லது நியமனப் பட்டியலில் உள்ளவர்களும் இன்றி மற்றும் எந்த ஒரு சிவப்புக் கம்பள வரவேற்புமும் இன்றி நடத்தப் பட்டது.
நெட்ஃப்ளிக்ஸ் ஊடகத்தின் “The power of the dog” எனும் திரைப்படமானது 2022 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த திரைப்படம்-நாடகம் என்ற ஒரு விருதினை வென்றது.
20வது சென்சூரி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் “West Side Story” திரைப்படமானது சிறந்த திரைப்படம் – இசை சார்ந்த (அ) நகைச்சுவைப் படம் என்ற விருதினை வென்றது.
HBO ஊடகத்தின் தொடரான Succession சிறந்த தொலைக்காட்சித் தொடர் – நாடகம் என்ற விருதினை வென்றது.
HBO ஊடகத்தின் Max’s Hacks சிறந்த தொலைக் காட்சித் தொடர் – இசை சார்ந்த (அ) நகைச்சுவை என்ற விருதினை வென்றது.
2021 ஆம் ஆண்டு வெளியான ‘King Richard’ எனும் திரைப்படத்தில் தான் ஆற்றிய ஒரு கதாபாத்திரத்திற்காக வில் ஸ்மித் தனது முதல் கோல்டன் குளோப் விருதினை வென்றார்.
“Being the Ricardos” என்ற திரைப்படத்தில் தான் ஆற்றிய ஒரு கதாபாத்திரத்திற்காக நிகோலே கிட்மேன் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினை வென்றார்.
“The Power of Dog” என்ற திரைப்படமானது சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதினையும் வென்றது.