36 வது கோல்டன் கோல் ஆப் வோஜ்வோதினா இளைஞர் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் பதக்கம் வென்று முத்திரை பதித்துள்ளனர்.
செர்பியாவின் சுபோடிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று முன்னிலை இடத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தியா 17 பதக்கங்களுடன் முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்தப் 17 பதக்கங்களில் 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.
ரஷ்யா 11 பதக்கங்களை (3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம்) வென்றுள்ளது. ஆனால் கஜகஸ்தானுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கஜகஸ்தான் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. கஜகஸ்தான் ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது.
அமன் (91 கிலோ), ஆகாஷ் குமார் (56 கிலோ), எஸ் பரூன் சிங் (49 கிலோ), விஜய் தீப் (69 கிலோ), நீது (48 கிலோ), திவ்யா பாவார் (4 கிலோ) மற்றும் லலிதா (64 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் ஆவர்.