TNPSC Thervupettagam

கோல்டன் மேன் புக்கர் சர்வதேச பரிசு - 2018 (Golden Man Booker International Prize 2018)

July 11 , 2018 2331 days 838 0
  • ஸ்ரீலங்காவில் பிறந்து கனடாவில் இலக்கியம் பயின்ற மைக்கேல் ஒன்டாட்ஜேயின் ‘ஆங்கில நோயாளி’ (The English Patient) லண்டனில் உள்ள தெற்குவங்கி மையத்தில் ஒரே முறை வழங்கப்படும் சிறப்பு விருதான கோல்டன் மேன் புக்கர் சர்வதேசப் பரிசினை வென்றுள்ளது.
  • புக்கர் பரிசு ஏற்படுத்தி 50 வருடங்கள் ஆனதின் கொண்டாட்டங்களை நினைவு கூற இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. ஒரே முறை வழங்கப்படும் இப்பரிசு மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • மேன் புக்கர் பரிசை வென்ற முன்னாள் வெற்றியாளர்கள் 51 நபர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு 5 புதினங்களின் இறுதி பட்டியலை தேர்வு செய்தது.
  • ‘ஆங்கில நோயாளி’ என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடந்த காதல் மற்றும் மோதல்களின் கதையாகும்.
  • முன்பு, ‘ஆங்கில நோயாளி’ 1992 ஆம் ஆண்டிற்கான புக்கருக்கான பரிசை பேரி அன்ஸ்வொர்த்தின் 18-வது நூற்றாண்டின் அடிமைகளைப் பற்றிய கதையான ‘புனிதமான பசி‘ - யுடன் (Sacred Hunger) பகிர்ந்து கொண்டது.
  • 2008-ல் புக்கர் பரிசு அதன் 40-வது ஆண்டு நிறைவுக்காக இதேபோல ஒரு போட்டியினை நடத்தியது. இதில் 1981-ல் இப்பரிசினை வென்ற சல்மான் ருஷ்டியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ (Midnight’s Children) புத்தகத்திற்கு பொதுமக்கள் வாக்களித்தனர்.
  • கற்பனைக் கதைகளுக்கான இந்த புக்கர் பரிசு 1969ல் முதன்முதலில் வழங்கப்பட்டது. இப்பரிசு 2002-லிருந்து மேன் குரூப்பினால் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்