TNPSC Thervupettagam

கோல்டன் லீஃப் விருது (தங்க இழை)

December 4 , 2019 1699 days 703 0
  • ஆந்திராவின் குண்டூரில் அமைந்துள்ள இந்தியப் புகையிலை வாரியத்திற்கு, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடந்த “டேப் எக்ஸ்போ - 2019” என்ற நிகழ்வில் கோல்டன் லீஃப் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தியப் புகையிலை வாரியம் கௌரவிக்கப் படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • இந்த அமைப்பானது 2014 ஆம் ஆண்டில், மின்னணு ஏல முறையை அமல்படுத்தியதற்காக இந்த விருதைப் பெற்றது. மேலும் இந்த வாரியமானது இந்தியாவில் பொலிவிலைப் புகையிலைகளை விற்பனை செய்வதை மிகவும் வெளிப்படையானதாகவும் பொறுப்புக் கூறக்கூடியதாகவும் ஆக்கியுள்ளது.
  • இந்தியாவில் பொலிவிலை வர்ஜீனியா (Flue-Cured Virginia) புகையிலை சாகுபடியில் பல்வேறு நிலைத்தன்மை (பசுமை) முயற்சிகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளுக்காக, 2019 ஆம் ஆண்டிற்கான பொது சேவை முன்முயற்சிப் பிரிவில் அதற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • புகையிலைத் துறையில் தொழில்முறைச் சிறப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் புகையிலை ரிப்போர்ட்டர் என்ற  சர்வதேச பத்திரிகையினால் கோல்டன் லீஃப் விருதுகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • உலகின் நான்காவது பெரிய பொலிவிலை வர்ஜீனியா புகையிலை உற்பத்தியாளர் நாடு இந்தியாவாகும்.
  • ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சுமார் 88,000 பொலிவிலைப் புகையிலை விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்தப் பயிரை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்