உலக முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சச்ஸ் பிராச்சி மிஸ்ராவை நிர்வாக இயக்குநர் மற்றும் இந்தியத் தலைமை பொருளாதார நிபுணராக நியமித்துள்ளது.
இவர் கோல்டுமேன் சச்ஸ்சில் இணைவதற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உலகின் மேற்கு துருவத்தின் துணைப் பிரிவுத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.
இந்தியாவில் கோல்டுமேன் சச்ஸ் வங்கி 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தனது முதலாவது அலுவலகத்தை பெங்களூருவில் தொடங்கியது.
இருந்தபோதிலும், இந்த வங்கியானது 1990 ஆம் ஆண்டு முதல் இந்திய வாடிக்கையாளர்களுக்காக பணியாற்றி வருகிறது. இது நாட்டில் உள்ள உயிர்ப்புள்ள முதலீட்டு வங்கியாகும்.