1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று கோவா மாநில அந்தஸ்தினைப் பெற்றது.
1510 ஆம் ஆண்டில் பீஜப்பூரின் அடில் ஷாவைத் தோற்கடித்து அல்போன்சோ டி அல்புகெர்க் கைப்பற்றியதிலிருந்து இந்தப் பகுதி ஒரு போர்த்துகீசியப் பிரதேசமாக இருந்தது.
400 ஆண்டுகளுக்குப் பிறகு, போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை இந்திய அரசு திரும்பப் பெற்றது.
போர்த்துகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிப்பதற்காக இந்திய ராணுவமானது, 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "ஆபரேஷன் விஜய்" என்ற நடவடிக்கையின் கீழ் கோவா மீது படையெடுத்தது.
இந்திய இராணுவத்தின் இந்த இணைப்பு நடவடிக்கையானது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று தொடங்கியது.