2019 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கோவா மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பிரமோத் சாவந்த் (45) பொறுப்பேற்றார்.
இவருக்கு கோவாவின் ஆளுநரான மிருதுளா சின்ஹாவால் பதவிப் பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பிரமோத் சாவந்த் கோவா சட்ட சபையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். இவர் வடக்கு கோவாவின் சாங்கிலிம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.