கோவா விடுதலை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 19 அன்று கொண்டாடப்படுகிறது. 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து கோவா விடுபட்டதை கொண்டாடும் விதமாகவும், “விஜய் நடவடிக்கை“ என்று குறிப்பிடப்படும் கோவா மீதான இந்தியாவின் படையெடுப்பின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டிசம்பர் 16, 1961 அன்று இந்திய இராணுவம் கோவா மீது படையெடுத்து போர்ச்சுகீசிய ஆட்சியிடம் இருந்து கோவாவை கைப்பற்றியது.
கோவாவிற்கு 1987ஆம் ஆண்டு தனி மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்பின் கோவா செழிப்பான மாநிலமாகவும், அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும் விளங்கி வருகின்றது.
இவ்வருடம் கோவா விடுதலை தினத்தின் 56வது ஆண்டு ஆகும்.