TNPSC Thervupettagam

கோவா விடுதலை தினம் - டிசம்பர் 19

December 21 , 2022 612 days 317 0
  • 1961 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து அம்மாநிலம் விடுதலை பெற்றதை நினைவு கூரும் வகையில் இத்தினமானது கொண்டாடப் படுகிறது.
  • 1510 முதல் சுமார் 450 ஆண்டுகளாக கோவா போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது.
  • 1949 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாடானது அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய இராணுவக் கூட்டணியான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ஒரு பகுதியாக மாறிய பிறகு, கோவா பகுதியும் சோவியத் எதிர்ப்புக் கூட்டணியின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.
  • கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மூன்று போர்த்துகீசியப் பிரதேசங்களை விடுவிப்பதற்காக விஜய் நடவடிக்கையானது தொடங்கப்பட்டது.
  • இது இந்திய ஆயுதப்படைகளின் முதல் முப்படை ஈடுபாடு கொண்ட நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்