TNPSC Thervupettagam

கோவாவில் பொது உரிமையியல் சட்டம்

August 10 , 2019 1808 days 788 0
  • கோவா மாநில அரசானது போர்ச்சுக்கீசிய காலத்தைச் சேர்ந்த பொது உரிமையியல் சட்டத்தைத் (UCC - Uniform Civil Code) திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே கோவா மாநிலத்தில் அம்மாநிலத்தைச் சேராதவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களைப் பதிவு செய்வதை அனுமதிக்க இந்தத் திருத்தம் வழிவகை செய்யும்.
  • கோவா மாநிலத்தைச் சேராதவர்களின் திருமணப் பதிவுகள் தற்பொழுது கோவாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
  • UCC ஆனது அப்போதைய போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களால் 1870 ஆம் ஆண்டில் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கோவா 1961 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த பொது உரிமையியல் சட்டம் தக்க வைக்கப்பட்டது.
  • 1987 ஆம் ஆண்டில் கோவா ஒரு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்