TNPSC Thervupettagam

கோவிட் -19 பற்றிய UNSC கூட்டம்

April 13 , 2020 1595 days 617 0
  • கோவிட் -19 தொற்றுநோய் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவானது (UNSC - United Nations Security Council) ஏப்ரல் 9, 2020 அன்று முதல் முறையாக கூடியது.
  • குழுவின் பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களுள் ஒன்பது பேர் தற்போதைய நெருக்கடியைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரியதனால் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
  • களங்கம் விளைவிக்கக் கூடிய மற்றும் அரசியல்மயமாக்கல் போன்ற எந்தவொரு செயலையும் நிராகரிக்க, சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவை வலியுறுத்தியது.
  • கடந்த மாதம் கரோனா வைரஸை "சீன வைரஸ்" என்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதால் இதை சீனா வலியுறுத்தியது.
  • சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலானது பொறுப்பாகும்.
  • இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயானது  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் ஆணைக்கு உட்பட்டதா இல்லையா என்பதில் அதன் உறுப்பு நாடுகள் உடன்படவில்லை.
  • இந்த உலகளாவிய நோயை "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை" என்று ஜெர்மனி வரையறுத்தாலும், சீனா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகள் பாதுகாப்பு குழுவின் கீழ் இந்த சுகாதார விஷயங்கள் வருவதில்லை என்றே கூறுகின்றன.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவுக்கு  தலைமை வகித்திருந்த சீனா, கோவிட் - 19 தொற்றுநோய் குறித்த அனைத்து விவாதங்களையும் நிராகரித்து, அது இக்குழுவின் கீழ் விவாதிக்க உட்பட்டது அல்ல என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்