TNPSC Thervupettagam

கோவிட் கவச் எலிசா சோதனை

May 14 , 2020 1531 days 724 0
  • புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியியல் மையமானது (NIV - National Institute of Virology) கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்புப் பொருள் கண்டறிதல் சாதனத்தை உருவாக்கியுள்ளது. 
  • இந்தச் சாதனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) மற்றும் NIV-யினால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டது.
  • இது மாதிரியில் உள்ள ஐஜிஜி நோய் எதிர்ப்புப் பொருளின் இருப்புத் தன்மையை சோதனை செய்ய இருக்கின்றது.
  • இந்தச் சோதனையானது ஒரு குறிப்பிட்ட ஆர்என்ஏ-வின் எண்ணிக்கையைச் சோதனை செய்ய இருக்கின்றது.
  • ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனையுடன் ஒப்பிடும் போது இதற்குக் குறைந்த அளவிலான உயிரிப் பாதுகாப்பு முறைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
  • இது ஒரு திறன்மிக்க, விலை குறைந்த மற்றும் விரைவுச் சோதனைக் கருவி ஆகும்.
  • இது 90 மாதிரிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே நேரத்தில் 2.5 மணி நேரத்தில் அவற்றைச் சோதனை செய்யும் திறன் கொண்டது.
  • குஜராத்தில் உள்ள சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் இந்த உபகரணங்களை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது.
  • NIV ஆனது இந்த நிறுவனத்திற்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்தை செய்ய இருக்கின்றது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான இந்தியாவின் போராட்டச் செயல்பாடுகளின் மிகப்பெரிய முன்னேற்றம் இதுவாகும். இந்தியா மிகப் பெரும்பாலான அளவில் தனது நோய்க் கண்டறிதல் உபகரணங்களை இறக்குமதி செய்கின்றது.
  • எலிசா என்பது நொதியுடன் தொடர்புடைய நோய் எதிர்ப்பு சோர்பென்ட் வகைச் சோதனையாகும் (ELISA - Enzyme-linked Immunosorbent Assay).
  • எலிசா என்பது மிகப் பரவலான நோய்த் தொற்றிற்கான, அதிலும் குறிப்பாக எச்ஐவி  போன்ற தொற்று நோய்க்கான நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்