கோவிட் செயல் குழு ஒன்று இந்தியாவில் தனியார் துறையின் முன்னனி நிதி மேலாளர்கள் மற்றும் முன்னணி துணிகர மூலதன நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றால் தொடங்கப்பட்டது.
இந்த வகையில், இதுவே உலகின் முதல் கோவிட் செயல் குழுவாகும்.
COVID-19 தொடர்பான தயாரிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் பணியாற்ற இந்திய நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக இந்த குழு நிதி திரட்டுகிறது.
மை லாப் நிறுவனமானது ரூ .1 கோடி நிதி உதவியை இதன் மூலம் பெற்றதன பிறகு இந்தக் குழுவானது சமீபத்தில் பிரபலமடைந்துள்ளது.
மைலாப் நிறுவனமானது இந்தியாவில் கரோனா சோதனைச் சாதனங்களைத் தயாரிக்கவும் விற்கவும் அனுமதி பெற்ற முதல் இந்திய நிறுவனமாகும்.
இந்தியா தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் செய்கிறது.