கோவிட் – 19 நோய்த் தடுப்பூசியின் மனிதச் சோதனையை நிறைவு செய்த முதலாவது நாடு ரஷ்யா ஆகும்.
இம்மருந்தின் மருத்துவச் சோதனையானது ரஷ்யாவில் உள்ள செச்சனோவ் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசியானது தசை வழியே திரவ வடிவில் செலுத்தப்படும் முறையில் பர்டன்கோ இராணுவ மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்க்கப் பட்டது.
அமெரிக்காவின் ஜிலெட் அறிவியல் நிறுவனம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் அமெரிக்காவின் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா நிறுவனம் ஆகியவை கோவிட் – 19 நோய்க்கான தடுப்பூசியை மேம்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன.