TNPSC Thervupettagam

கோவிட் நோய்த் தொற்றிற்கான மருத்துவச் சோதனைகள்

May 1 , 2020 1672 days 667 0
  • மனிதர்களின் மீதான கோவிட்-19 தடுப்பூசியின் முதல் மருத்துவப் பரிசோதனைக்கு ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜெர்மன் பயோடெக்னாலஜி நிறுவனமான பயோஎன்டெக்கின் தடுப்பூசித் திட்டம் மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து பிஎன்டி162 மருந்தை உருவாக்குகின்றன.
  • இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நான்காவது மருத்துவச் சோதனை ஆகும்.
  • பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சோதனை முயற்சியாக தன்னார்வலர்களுக்கு முதல்முறையாக ஒரு சக்திமிக்க தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் பரிசோதிக்கப்பட உள்ளனர். 
  • இது மனிதக் குரங்குகளில் காணப்படும் நச்சுயிரியை அடிப்படையாகக் கொண்டது.
  • பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்போர்டு தவிர, மனிதர்கள் மீதான மற்ற மூன்று மருத்துவப் பரிசோதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இந்தச் சோதனையை மேற்கொள்வதில் சீனா மற்றும் அமெரிக்கா முதலிடத்தை நோக்கி நகர்கின்றன.
  • இராணுவ ஆதரவுடைய ராணுவ மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஹாங்காங்கைத்  தளமாகக் கொண்ட கன்சினோ பயோ உருவாக்கிய தடுப்பூசிக்கான முதல் சோதனைக்கு பெய்ஜிங் ஒப்புதல் அளித்தது.
  • அமெரிக்க மருந்து உருவாக்குநரான மாடர்னா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து சோதனையைத் தொடங்கி உள்ளது.
  • மற்றொரு அமெரிக்க ஆய்வகமான சான் டியாகோவைத் தளமாகக் கொண்ட இன்னோவியோ பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனமும் முதல் கட்ட மனிதச் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

Name of Vaccine

Developer Name

Current stage of clinical Trials

Start Date

AD5-NCOV (Adenovirus Type 5 Vector)

CanSino Biological & Beijing Institute of Biotechnology

Phase 2

10 April

ChAdOx1

University of Oxford

Phase 1/2

23 April

INO-4800

DNA plasmid vaccine

Inovio Pharmaceuticals

Phase 1

3 April

Inactivated

Beijing Institute of Biological Products

Phase 1

10 April

PiCoVacc (Inactivated + alum)

Sinovac

Phase 1

13 April

BNT162

mRNA

BioNTech/Fosun Pharma/Pfizer

Phase 1/2

Approved, not started

LNP-encapsulated mRNA-1273

Moderna/NIAID

Phase 1

3 March

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்