TNPSC Thervupettagam

கோவிட் – 19 உலகளாவிய ஒற்றுமைச் சோதனை

May 18 , 2020 1561 days 684 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR - Indian Council for Medical Research) இந்தச் சோதனையில் பங்கேற்க இருக்கின்றது.
  • ICMR தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனமானது இந்தியாவில் ஒற்றுமைச் சோதனைக்கான தேசிய ஒத்துழைப்புத் தளமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் உள்ள 4 முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்தச் சோதனையில் பங்கேற்க இருக்கின்றன.
  • வதோதரா, அகமதாபாத், சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகியவை இந்த நகரங்களாகும்.
  • உலக சுகாதார அமைப்பானது 4 சிகிச்சை முறைகளின் திறன் மற்றும் துல்லியத் தன்மையைச் சோதனை செய்வதற்காக 4 மிகப்பெரிய சோதனைகளைத் தொடங்கி உள்ளது.
  • இந்த சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
    • ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்
    • ரெம்டெசிவிர்
    • லோபினாவிர் – ரிட்டோனாவிர்
    • இன்டர்பெரோன் என்ற மருந்துடன் லோபினாவிர்  - ரிட்டோனாவிர்
  • லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் ஆகியவை தற்பொழுது எச்ஐவி தொற்று நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
  • ரெம்டெசிவிர் மருந்திற்கு உலகில் எந்தவொரு நாட்டிலும் ஒப்புதல் அளிக்கப்பட வில்லை.
  • எனினும் ரெம்டெசிவிர் மருந்தானது ரெகஸ்சஸ் வகை குரங்குகளில் எபோலா வைரசைத் தடுக்கின்றது. 
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்