கோவிட்-19 கட்டுப்பாடுக் கட்டளை மையமாக (War Room) செயல்பட உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கட்டளை மையத்தினுடைய (Unified Command Centre – UCC) ஆறு முதன்மை அலுவலர்களின் பெயர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளுக்கான நிர்வாக இயக்குநர் தரேஷ் அகமத் அவர்கள் UCC மையத்தின் தலைமைப் பொறுப்பினையும் கட்டளை மையத்தினுடைய ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்கானப் பொறுப்பினையும் ஏற்க உள்ளார்.
தமிழ்நாடு குடிமைப் பணிகள் ஆணையத்தின் செயலரான K. நந்தகுமார் அவர்கள் மாநில அளவிலான ஆக்சிஜன் கண்காணிப்பு மற்றும் அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றுக்கான முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. நந்தகுமார் அவர்கள் தமிழ்நாடு மருத்துவ கருவிகள் வழங்கீட்டுக் கழகத்துடன் இணைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் திரவ ஆக்சிஜன் தேவை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர் கொள்வார்.
கூடுதல் ஆட்சியரான (வளர்ச்சி) டாக்டர். S. உமா அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் மீதான மேலாண்மை விவகாரத்தினைக் கண்காணிப்பதற்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
TANGEDCO (Tamil Nadu Generation and Distribution Corporation Limited) அமைப்பின் இணை நிர்வாக இயக்குநரான டாக்டர் S. வினீத் அவர்கள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனைகளை நேரில் சென்று ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்வார்.
வேலூரின் துணை ஆட்சியரான R. ஐஸ்வர்யா மற்றும் திருவள்ளூரின் ஆட்சியரான அனாமிகா ரமேஷ் ஆகியோர் இவருக்கு உதவிகரமாக இருப்பர்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலுள்ள முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகள் (பிரத்தியேக கோவிட் – 19 மருத்துவமனைகள்) மற்றும் இதர பிரத்தியேக கோவிட் – 19 மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணிகளை TIDCO (Tamil Nadu Industrial Development Corporation) அமைப்பின் நிர்வாக இயக்குநரான K.P. கார்த்திகேயன் அவர்கள் மேற்கொள்வார்.
கட்டுப்பாட்டுக் கட்டளை மையத்தின் தரத்தினைப் பராமரித்தல் மற்றும் அதன் சேவைகள் திறம்பட கிடைக்கப் பெறச் செய்வதற்கான பணிகளை TANFINET அமைப்பின் பொது மேலாளரான R. அழகுமீனா அவர்கள் மேற்கொள்வார்.