TNPSC Thervupettagam

கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்து சோதனைக்காக வேண்டி இந்தியா + 5

October 10 , 2020 1417 days 590 0
  • புத்தாக்கத்திற்கான கொள்ளை நோய்த் தடுப்புத் தயார் நிலையின் மீதான கூட்டிணைவின் (CEPI - Coalition of Epidemic Preparedness for Innovation) உலகளாவிய முன்னெடுப்பானது 6 ஆய்வகங்களை அடையாளம் கண்டுள்ளது.
  • பிரிட்டன், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, வங்க தேசம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகளில் இந்த ஆய்வகங்கள் உள்ளன.
  • இந்தியாவின் THSTI ஆய்வகமானது CEPI-ன் உலகளாவிய அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • THSTI என்பது உருமாற்றம் கொண்ட சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமாகும்.
  • இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி மையமாகும்.

CEPI

  • இதன் தலைமையகம் நார்வேயில் அமைந்துள்ளது.
  • இது புதிதுபுதிதாக அதிகரித்து வரும் தொற்று நோய்களுக்கு எதிராக ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் தடுப்பு மருந்துகளை மேம்படுத்துவதற்கு வேண்டிய நிதியினை அளிப்பதற்காக நன்கொடைகளைப் பெற்றுத் தரும் ஒரு அமைப்பாகும்.
  • CEPI ஆனது உலக சுகாதார அமைப்பின் முன்னுரிமைச்  செயல்திட்ட நோய்களின்” (Blueprint Priority Diseases) மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்