கோவிட் – 19 நோய்த்தொற்றின் மருத்துவ முறை மேலாண்மை நெறிமுறை
June 19 , 2020 1624 days 610 0
சமீபத்தில் மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகமானது கோவிட் – 19 தொற்றுநோய் நோயாளிகளின் சோதனை முறையிலான மருத்துவச் சிகிச்சை மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ முறை மேலாண்மை நெறிமுறையின் ஒரு பகுதியாக ரெம்டெசிவிர் மருந்தைச் சேர்த்துள்ளது.
மேலும் இந்த அமைச்சகமானது சுவை இழப்பு மற்றும் மணம் நுகரும்தன்மை இழப்பு ஆகிய இரண்டையும் கோவிட் – 19 நோய்த் தொற்றின் 2 முக்கிய அறிகுறிகளாக அறிவித்துள்ளது.
தற்போதைய மேம்படுத்தப்பட்ட நெறிமுறையின் கீழ், இந்த அமைச்சகமானது கடுமையான சூழ்நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயினை (HCQ) பயன்படுத்துவதற்கான தனது பரிந்துரையை நீக்கியுள்ளது.
மேலும் அசித்ரோமைசினுடன் HCQ மருந்தைப் பயன்படுத்துதல் என்ற நெறிமுறையும் நீக்கப் பட்டுள்ளது.