TNPSC Thervupettagam

கோவிட் – 19 வைரஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட 3 துணை இனங்கள்

April 2 , 2020 1701 days 545 0
  • நாட்டில் கோவிட் – 19 என்ற வைரஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட 3 துணை வைரஸ் இனங்கள் உலவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) அறிவித்துள்ளது.
  • இந்தக் கழகத்தின் படி, இவை வெளிநாட்டிலிருந்துப் பரவி வந்த வைரஸ் வகைகளாகும்.
  • இந்தியாவில், கோவிட் – 19 வைரஸ் தொற்றானது வெளிநாட்டிற்குப் பயணம் செய்த (வெளிநாட்டிலிருந்து வந்த) மக்களிடமிருந்து வந்துள்ளது.
  • எனவே, இந்த வைரஸ் இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டு வரப் பட்டதாகும்.
  • இதுவரை, உலகின் மற்ற பகுதிகளில் இந்த வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு அறிவியல் பூர்வச் சான்று எதுவும் இல்லை.
  • இருப்பினும், நாட்டின் உள் மற்றும் வெளிக் காரணிகள், உயிரியல் காரணங்கள் மற்றும் நாட்டில் உள்ள மக்கள் ஆகிய காரணிகளின் காரணமாக இந்த வைரசானது அதன் வெவ்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளது என்பதை ICMR உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்