TNPSC Thervupettagam

கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்த ஆண்டு

October 5 , 2018 2146 days 602 0
  • கூகுள் டூடிள் ஆனது அக்டோபர் 1 அன்று புகழ்பெற்ற கண் மருத்துவரான கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்த தினத்தன்று அவருக்கு மரியாதை செலுத்தியது.
  • இவர் உலகில் கண் மருத்துவச் சேவையை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமான அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.
  • இவர் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று தமிழ்நாட்டின் வடமலபுரத்தில் பிறந்தார். வெங்கடசாமி கண்பார்வையற்றோருக்கு சிகிச்சை அளிப்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
  • நாட்டிற்கு சிறப்பான சேவையாற்றியதற்காக 1973 ஆம் ஆண்டு வெங்கடசாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்