தனி நீதிபதி தலைமையில் ஜூன் 26 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
அர்ச்சகர்கள் (கோயில் அர்ச்சகர்கள்) நியமனத்தில் சாதிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஜூன் 26 ஆம் தேதியன்று வழங்கப் பட்ட தீர்ப்பில் கூறப்பட்டது.
மேலும், ஆகம சாஸ்திரத்தின் படி பூஜைகள் மற்றும் பிற சடங்குகளைச் செய்ய முறையாகப் பயிற்சிப் பெற்ற எவரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த வழிகாட்டுதல்கள் ஆனது, சேஷம்மாள் வழக்கில் (1972) உச்சநீதிமன்றம் வகுத்த சட்டத்திற்கு முரணானது.
28 சைவ ஆகமங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோவில்களில், ஆதி சைவர்கள் / சிவாச்சாரியர்கள் /குருக்கள் ஆகிய சமூக பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆவதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் என்று காரண ஆகமமும், இதர மற்ற 27 சைவ ஆகமங்களும் தெளிவாகக் கூறுகின்றன.
இந்த வழக்கத்தினை சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள்
ஸ்ரீமத் பேரருளலா எத்திராஜ ராமானுஜ ஜீயர் சுவாமி மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இடையிலான வழக்கு (1972).
ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இடையிலான வழக்கு (2016).