TNPSC Thervupettagam

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்

June 29 , 2023 516 days 252 0
  • சென்னை உயர்நீதிமன்றமானது கோயில் அர்ச்சகர் நியமனத்தில் சாதி அடிப்படையில் அமைந்த வம்சாவளி என்ற கருத்திற்கு இடம் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்து உள்ளது.
  • சமய நூல்கள் மற்றும் சடங்குகள் குறித்து ஒருவர் எவ்வளவு நன்கு அறிந்துள்ளார் என்பது தான் இத்தகைய நியமனங்களுக்கான ஒரே அளவுருக்களாக கருதப்படும்.
  • முத்து சுப்ரமணியக் குருக்கள் 2018 ஆம் ஆண்டில் ஒரு நீதிப்பேராணை மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
  • சேலத்தில் உள்ள ஸ்ரீ சுகவனேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் அர்ச்சகர் / ஸ்தானிகர் (அர்ச்சகர் என்றும் அழைக்கப்படும் கோயில் அர்ச்சகர்) பதவிக்காக வெளியிடப்பட்டப் பணி அறிவிப்பை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்தப் பதவி நியமனங்கள் கோயில் நிர்வாகத்தினால் கடைப்பிடிக்கப்படும் குறிப்பிட்ட ஆகம (கோயில் சடங்குகளில் பின்பற்றப்படும் வேதங்கள்) கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், பணியிட நிரப்பல் குறித்த இந்த விளம்பரமானது மனுதாரர் மற்றும் பிறரின் வம்சாவளி உரிமையை மீறுவதாகவும் வாதிடப்பட்டது.
  • ஆனால் 2016 ஆம் ஆண்டு அகில இந்திய ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் சேவை சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றிற்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நீதிபதி வெங்கடேஷ் மேற்கோள் காட்டி தனது கருத்தினைத் தெரிவித்தார்.
  • கோவில் அர்ச்சகர் பணி நியமனமானது மதச்சார்பற்ற செயல்பாடு என்றும், வம்சாவளி உரிமை தொடர்பானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • அர்ச்சகரின் சமயச் சேவை என்பது மதத்தின் மதச்சார்பற்ற அங்கமாகும் என்றும், மதச் சேவையினை வழங்குவது மதத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும் என்று உச்சநீதி மன்றம் கூறியது.
  • 2022 ஆம் ஆண்டு N. ஆதித்யன் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் இடையேயான வழக்கில், ஒரு பிராமணர் (இந்த வழக்கில், மலையாளிப் பிராமணர்) மட்டுமே சடங்குகள் மற்றும் பூஜைகளைச் செய்ய முடியும் என்று வலியுறுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்