இந்து சமய அறநிலையத் துறையானது (The Hindu Religious and Charitable Endowments - HR&CE) மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரியக் கோவில்களின் பாதுகாப்பிற்கான ஒரு கையேட்டைத் தயார் செய்துள்ளது.
கோவில்களின் கட்டமைப்புகள் பலவீனமாக இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவி இல்லாமல் அதன் பராமரிப்பைத் தொடருவதை உறுதி செய்வதற்காகவும் இதுபோன்ற ஒரு அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய கையேடு தேவைப்படுகின்றது.
HR & CE துறையானது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 36,700 கோவில்களை நிர்வகிக்கின்றது.
இந்தக் கோவில்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் பாரம்பரிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோவில்கள் 100 ஆண்டுகள் பழமையானதாகும்.