TNPSC Thervupettagam

கோவில்களில் கைபேசி பயன்பாட்டிற்குத் தடை

January 2 , 2023 567 days 418 0
  • வழிபாட்டுத் தலங்களின் "புனிதத்தையும் தூய்மையையும்" பேணும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் கைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
  • அரசியலமைப்பின் 25வது சட்டப்பிரிவின் கீழ், அனைத்து நபர்களும் சுதந்திரமான முறையில் தனது மதம் பற்றி போதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உண்டு என்பதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  • 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தின் விதிகளின்படி, அறங்காவலர்கள் அல்லது கோயிலின் பொறுப்பினை வகிக்கும் எந்தவொரு அதிகாரியும், கோவில் வளாகத்தில் ஒழுங்கு மற்றும் நல்லொழுக்கத்தினைப் பேணுவதற்கான விதிமுறைகளை உருவாக்க இயலும்.
  • குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் கைபேசி பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • இந்தக் கோவில்களின் வளாகத்திற்குள் நுழையும் முன் அங்கு கைபேசிகளை ஒப்படைப்பதெற்கென இந்தக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனி பாதுகாப்பு முகப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்