பாரத் பயோடெக் நிறுவனமானது கோவேக்ஸின் மருந்திற்கான மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனை தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தடுப்பிற்காக நடத்தப்படும் ஒரு மிகப் பெரிய மருத்துவச் சோதனை இதுவாகும்.
மேலும் இதற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகத்தினாலும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research - ICMR) அமைப்புடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
கோவேக்ஸின் என்பது இந்தியாவின் ஒரு உள்நாட்டு கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்தாகும்.
இது தேசிய நச்சுயிரியல் மையம் (NIV - National Institute of Virology) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது பாரத் பயோடெக்கின் பிஎஸ்எல்-3 (உயிரிப் பாதுகாப்பு நிலை - 3) என்ற ஒரு உயிரிக் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப் பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வெரோ செல் உற்பத்தித் தளத்தில் தயாரிக்கப்படுகின்றது.