TNPSC Thervupettagam

கோவை சிங்காநல்லூர் குளம்: தமிழகத்தின் முதல் நகர்ப்புறப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

July 31 , 2017 2672 days 1141 0
  • 16-ம்நூற்றாண்டில்சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளம், நொய்யல் ஆற்றில் இருந்தும், நகரின் இதர நீர்வழித்தடங்களில் இருந்தும் நீரைப் பெறுகிறது.
  • மற்ற எந்த குளங்களிலும் இல்லாத அளவுக்கு இயற்கைச்சூழல், பசுமையானபரப்பு, பல்லுயிர் செழுமை ஆகியவை இந்த நீர்நிலைக்கு நிறைந்துள்ளன. அதன் பிரதிபலிப்பாகவே இங்குகடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில், தாவர, பறவை உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
  • குறிப்பாக 396 வகைதாவரங்கள், 160 வகையானபறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச்செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது.
  • நகரில் எங்கும் இல்லாத வகையில் நன்னீர் ஆமை அதிகமாக உள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இயற்கை சூழலியல் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும், ஆய்வுக்கு இடமளிக்கும் பகுதியாகவும் இந்த குளம் மாறியுள்ளது. இந்த சூழலை அங்கீகரித்து, மேம்படுத்த ‘நகர்ப்புறப் பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’
  • முன்னாள் குடியரசுத்தலைவர் நினைவாக, குளக்கரையில் ‘கலாம் வனம்’ அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்