கார்லோஸ் அல்வரடோ கியூஸாடா (வயது 38), கோஸ்டா ரிக்கா ஜனாதிபதியாக நாட்டின் தலைநகரான சான்ஜோஸிலுள்ள குடியரசு சதுக்கத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
இவர், பழமைவாத புரோட்டஸ்டன்ட் பாடகரான ஃபேப்ரிகோ அல்வரடோ முனோஜ்-ஐ வெற்றி கொண்டார்.
இதழியலாரான (Journalist) கார்லோஸ் அல்வரடோ, தன்னுடைய கூட்டணியாளரும், முன்னாள் பிரதமருமான லூயி கில்லர்னோ சோலிஸிடமிருந்து பதவிக்கான நீண்ட அங்கியினைப் (Sash of Office) பெற்றுக் கொண்டார்.
கார்லோஸ் அல்வரடோ, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதாகவும், வறுமைக்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டானது மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிக்கா சுதந்திரமடைந்த 200-வது ஆண்டாகும்.