TNPSC Thervupettagam

கோஹிமாப் போர்

April 7 , 2019 2001 days 450 0
  • இந்தியா கோஹிமாப் போரின் 75-வது நினைவு தினத்தை ஏப்ரல் 4 அன்று கடைபிடித்தது.
  • இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டில் ஜப்பானியரால் நடத்தப்பட்ட யு-கோ தாக்குதல் அல்லது ஆபரேஷன் சி-யின் திருப்பு முனையாக கோஹிமாப் போர் கருதப்படுகின்றது.
  • இந்தப் போரானது 1944 ஆம் ஆண்டில் ஏப்ரல் 4 முதல் ஜூன் 22 வரை நாகாலாந்தின் கோஹிமா நகரைச் சுற்றிலும் மூன்று நிலைகளில் நடைபெற்றது.
  • இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் ஜப்பானியர்களை வெற்றிகரமாக வெளியேற்றின.
  • இந்தப் போரானது “கிழக்கின் ஸ்டாலின்கிரேடு” என்றும் அழைக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டில், பிரிட்டின் தேசிய இராணுவ அருங்காட்சியகமானது இம்பால் மற்றும் கோஹிமாவில் நடைபெற்ற போரை “பிரிட்டனின் சிறந்த போர்” என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்