ஆந்திரப் பிரதேசத்தின் விளையாட்டு ஆணையம் (SAAP) ஆனது, இந்தியாவில் முதன் முறையாக ‘க்ரீடா செயலி’ எனப்படும் இந்த வகையிலான கைபேசிச் செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மாநிலம் முழுவதும் விளையாட்டுத் துறை மேலாண்மையை நவீனப்படுத்தவும், சீரமைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரிவான விளையாட்டுத் தரவை நிர்வகிப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்தத் தளத்தை வழங்குவதோடு, விளையாட்டுத் துறை சார்ந்த இட ஒதுக்கீட்டுச் சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள முறைகேடுகளை அகற்றச் செய்வதை இந்தச் செயலியானது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது விளையாட்டு வீரர்களின் பதிவு, செயல்திறன் கண்காணிப்பு, போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.