க்ருத்ரிம் செயற்கை நுண்ணறிவு
December 21 , 2023
340 days
301
- ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானவர் க்ருத்ரிம் (சமஸ்கிருதத்தில் செயற்கை என்று பொருள்) என்ற தீர்வினைச் சமீபத்தில் வெளியிட்டார்.
- இது "இந்தியாவின் முதல் பல் கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவு" தீர்வாகவும் கூறப் படுகிறது.
- இந்த இயங்குதளம் ஆனது ChatGPT உடன் முற்றிலும் ஒத்திருக்கிறது.
- பல்வேறு இந்திய மொழிகளில் GPT-4 விட க்ருத்ரிம் செயற்கை நுண்ணறிவு சிறந்தது.
- இதனால் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளைப் புரிந்து கொள்ள முடியும் மற்றும் சுமார் 10 மொழிகளில் பதிலை உருவாக்க முடியும்.
- இதில் மராத்தி, இந்தி, வங்காளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகியவை அடங்கும்.
- இது அடிப்படை க்ருத்ரிம் மாதிரி, மற்றும் மிகவும் திறம் வாய்ந்த க்ருத்ரிம் ப்ரோ என இரண்டு வகைப்பாடுகளில் கிடைக்கப் பெறும்.
Post Views:
301