மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆனது, ஜூலை 01 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சுவச் பாரத் திட்டம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் சஃபாய் அப்னாவ், பிமாரி பகாவோ முன்னெடுப்பினை தொடங்க உள்ளது.
அதிக மழைப்பொழிவு மற்றும் அதிகரித்துள்ள சுகாதார நலம் சார்ந்த அபாயங்களால் ஏற்படும் சவால்களை நன்கு கையாள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தயார் நிலையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தூய்மை, போராடுதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல விரிவான திட்டங்கள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாலும் செயல்படுத்தப்பட வேண்டும்.
இது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ‘வயிற்றுப்போக்குப் பாதிப்பினை ஒழித்தல் பிரச்சாரத்துடன்’ ஒத்துப் போகிறது.