சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம் என்பது சகிப்புத் தன்மையின்மையின் ஆபத்துக்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்ட ஒரு வருடாந்திர அனுசரிப்பு தினமாகும்.
இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
1995 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது இரண்டாண்டிற்கொருமுறைவழங்கப்படும் “சகிப்புத் தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ - மதன்ஜீத் சிங் பரிசு” என்ற ஒரு பரிசை நிறுவியுள்ளது.
இத்தினமானது வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு முக்கியப் பங்காற்றிய இந்திய அயல் பணி அதிகாரியான மதன்ஜீத் சிங் என்பவரை அங்கீகரிக்கின்றது.