TNPSC Thervupettagam

சக்தி பட் முதல் புத்தக பரிசு 2018

October 24 , 2018 2127 days 711 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த தலித் எழுத்தாளரான சுஜாதா கித்லா (55) தனது முதல் புத்தகமான “Ants Among Elephants: An Untouchable Family and the Making of Modern India” என்ற புத்தகத்திற்காக 2018-ன் சக்தி பட் முதல் புத்தக பரிசை வென்றுள்ளார்.
  • இந்த புத்தகமானது நவீன இந்தியாவில் வளர்ந்து வரும் ‘தீண்டத்தகாத’ குடும்பத்தை பற்றிய தொகுப்பாகும். இது ஹார்பர் காலின்ஸ் இந்தியாவால் பிரசுரித்து வெளியிடப்பட்டது.
  • உள்நாட்டுப் போரின் பின்னணியில் அமைந்த “The Story of a Brief Marriage” என்ற அவரது முதல் நாவலுக்காக 2017 ஆம் ஆண்டில் இலங்கை எழுத்தாளரான அனூக் அருட் பிரகாசம் இப்பரிசை வென்றார்.

சக்தி பட் முதல் புத்தக பரிசு

  • சக்தி பட் முதல் புத்தக பரிசானது சக்தி பட் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது.
  • இது இளம் எழுத்தாளர் மற்றும் ஆசிரியரான சக்தி பட்டின் நினைவாக 2008 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • இந்திய துணைக்கண்டத்திலிருந்து புனைக்கதை அல்லது கற்பனையல்லாத படைப்புகளுக்காக ஒரு எழுத்தாளரை கௌரவிப்பது இதுவே முதன்முறையாகும்.
  • இது 2 லட்சம் ரொக்கப் பரிசை உடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்