TNPSC Thervupettagam

சக்தி வாய்ந்த 'X-வகை' சூரியக் காந்தப் புயல்

April 6 , 2023 472 days 248 0
  • சூரியன், மார்ச் 29 ஆம் தேதியன்று காலை 8.03 மணிக்கு உச்ச அளவினை எட்டிய நிலையில் ஒரு சக்தி வாய்ந்த 'X-வகை' சூரியக் காந்தப் புயலினை வெளியேற்றியது.
  • இந்த காந்தப் புயல் ஆனது X1.2 காந்தப் புயல் என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தக் காந்தப் புயலானது, நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் என்பதன் மூலம் கண்டறியப் பட்டது.
  • இது நமது சூரிய மண்டலத்தின் மைய நட்சத்திரமான AR3256 என்ற சூரியப் புள்ளி (அதிக காந்த சக்தி)  பகுதியிலிருந்து வெளியேறியது.
  • சூரியப் புயல்களில் B, C, M மற்றும் X என நான்கு வகைகள் உள்ளன.
  • C-வகை காந்தப் புயல் ஆனது, B வகை வகைகயை விட 10 மடங்கு சக்தி வாய்ந்ததாகும் என்ற நிலையில், இதே அளவில் அடுத்ததடுத்த வகையும் சக்தி வாய்ந்தவை ஆகும்.
  • ஒவ்வொரு வகையும் ஒன்பது உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • X- என்பது காந்தப் புயலின் வலிமையைக் குறிக்கிறது.
  • X என்ற எழுத்தினைத் தொடர்ந்து இடம் பெறும் எண் அவற்றின் வலிமையைச் சரியான அளவில் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்