சில நாட்களுக்கு முன்பு, AR3663 என்ற சூரிய கரும்புள்ளிப் பகுதியிலிருந்து இரண்டு மகத்தான சூரியச் சுடரொளிகள் வெளிப்பட்டன என்பதோடு அதன் சுடர் பரவல் பகுதியில் பூமி அமைந்துள்ளது.
அதன் முதல் வெடிப்பு ஆனது மே 02 ஆம் தேதியன்று ஏற்பட்டது என்ற நிலையில் இது சூரியச் சுடரொளிகளில் மிகவும் சக்திவாய்ந்த வகையான X-வகை சுடரொளி ஆகும்.
இது ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனாவின் பெரும்பகுதி முழுவதும் குறு அலை ரேடியோ தாக்க நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.
X சுடரொளி! என்ற சூரியக் கரும்புள்ளி பகுதி AR3663 ஆனது தற்போது ஒரு X1.7 சுடரொளியினை உருவாக்கியுள்ள வகையில் இது இதுவரை இந்த சுழற்சியில் நிகழ்ந்த 11வது பெரிய சுடரொளி ஆகும்.
இரண்டாவது வெடிப்பு ஆனது M-வகை சுடரொளி என்று அறிவிக்கப்பட்டது.
சுடரொளி அவற்றின் வலிமைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படுகின்றன.
மிகவும் சக்தி வாய்ந்த X-வகைக்கு அடுத்தபடியாக, 10 மடங்கு மிக குறைவான சக்தி வாய்ந்த M-வகை சுடரொளிகள் உள்ளன.
அதைத் தொடர்ந்து C-வகை மற்றும் இறுதியாக, B-வகை சுடரொளிகள் உள்ளன.