சூறாவளி (Cyclone) என்று பொருள்படும் சக்ராவத் (Chakravat) எனப் பெயரிடப்பட்ட பன்-நிறுவன மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் (Multi-agency humanitarian assistance and disaster relief-HADR) பயிற்சியை இந்திய கடற்படை (Indian Navy) கொச்சி கடற்கரையில் நடத்தியுள்ளது.
கேரள அரசுடனான ஒத்துழைப்பினோடு தெற்கத்திய கடற்படைப் பிரிவானது (Southern Naval Command) கொச்சியினுடைய BTP கப்பற் படகுத் துறையில் (Jetty) இப்பயிற்சியை நடத்தியுள்ளது.
பருவகால சூறாவளித் (Cyclonic storm) தாக்குதல் நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்படும் பதிலெதிர்ப்பு இயங்குமுறையை (Response mechanism) மதிப்பாய்வு செய்வதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority), தேசிய பேரிடர் பதிலெதிர்ப்புப் படை (National Disaster Response Force-NDRF), மாநில கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு பெற்றன.