TNPSC Thervupettagam

சங்க கால குமிழ் அணி மற்றும் உருள் மணி

July 11 , 2023 376 days 384 0
  • புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக் கோட்டையில் தங்கக் குமிழ் அணி, எலும்புத் துண்டு மற்றும் கார்னிலியன் உருள் மணி ஆகியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • இது மூக்குத்தியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு, மேலும் இது சங்கக் காலத்தின் கலாச்சாரத்தின் அறிகுறியாகவும் கருதப் படுகிறது.
  • மற்றொரு அகழியில் எலும்புத் துண்டு மற்றும் கார்னிலியன் மணியின் ஒரு உடைந்தத் துண்டு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டது.
  • சிவப்பு வட்ட வடிவ கார்னிலியன் மணிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு உள்நாட்டு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டதற்கான ஒரு சுட்டியாகவும் இது கருதப் படுகிறது.
  • கொடுமணல் மற்றும் தமிழ்நாட்டின் வேறு சில இடங்களில் கார்னிலியன் மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கற்கள் பொதுவாக குஜராத்தில் இருந்து பெறப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்