TNPSC Thervupettagam

சங்கரலிங்கனார் நாள் - அக்டோபர் 13

October 25 , 2019 1860 days 1370 0
  • 1952 ஆம் ஆண்டில், மதராஸைத் தலைநகராகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு தனி மாநிலத்தை பொட்டி ஸ்ரீராமுலு கோரினார்.
  • அவர் தனது கோரிக்கையுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, பின்னாளில் அந்த உண்ணாவிரதத்தின் போதே இறந்தார்.
  • இந்திய அரசு ஒரு தனி மாநிலத்தை உருவாக்கி, பின்னர் மொழியியல் அடிப்படையில் 1956 ஆம் ஆண்டில் மாநிலங்களை மறுசீரமைத்தது.
  • மறுசீரமைப்பின் பின்னர், மதராஸ் மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக மாறினர்.
  • சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று விருதுநகரில் ஒரு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதில் பன்னிரண்டு கோரிக்கைகள் இருந்தன. அதில் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
  • 76 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, அவர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று இறந்தார்.
  • இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் மூலம் 1969 ஜனவரி 14 அன்று இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மாற்றப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் விருதுநகரில் சங்கரலிங்கனாருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை தமிழக அரசு கட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்