பிரதம மந்திரி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு திறன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக உலக வங்கியின் ஆதரவு உள்ள இரு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சங்கல்ப் (SANKALP) – Skills Acquisition and Knowledge Awareness for livelihood Promotion)- நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சந்தை சார்ந்த பயிற்சிகளை அளித்தால்.
ஸ்ட்ரைவ் (Strive) – Skill Strengthening for industrial values enhancement- ITI களில் வழங்கப்படும் தொழிற்கல்வியின் சந்தை சார்புடைமையையும், தரத்தினையும் அதிகப்படுத்துதல்.
இத்திட்டங்கள் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இத்திட்டங்கள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அனும தொழிற்கல்விக்கான தேசிய அமைப்பை ஏற்படுத்த உதவும் (Vocational Education and Training -VET).
தொழில் துறைக்கு திறனுடைய தொழிலாளர் படையை அளித்து அதன்மூலம் எளிதில் வணிகம் செய்யும் குறியீட்டில்( Ease Of doing Business Index) இந்தியாவின் நிலையை உயர்த்தவும், திறனை மேம்படுத்தும் சூழலை உருவாக்கவும் இத்திட்டம் உதவும்.