TNPSC Thervupettagam

சங்கீத கலாநிதி விருது: சி.என். ரவிகிரண்

July 17 , 2017 2718 days 1647 0
  • சித்திரவீணை கலைஞர் என். ரவிகிரணுக்கு "சங்கீத கலாநிதி" விருது வழங்கப்பட்டுள்ளது. மியூசிக் அகடமி வழங்கும் மழலை மேதைகளுக்கான உதவித்தொகையினை 1996 ஆம் ஆண்டு பெற்றவர் ரவிகிரண்.
  • டிசம்பர் 15 முதல் ஜனவரி 1 வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 91ஆவது ஆண்டு மாநாட்டுக்கு என். ரவிகிரண் தலைமை தாங்குவார். அவருக்கு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் சதஸ் விழாவில் விருது வழங்கப்படும்.
சதஸ் விழாவின் இந்த ஆண்டிற்கான முக்கிய விருதுகள்
சங்கீத கலா ஆச்சார்யா விருது  -> மிருதங்கம் கலைஞர் - வி. கமலாகர் ராவ் -> பாடகர் - ராதா நம்பூதிரி
டிடிகே (TTK Awards)விருதுகள் ->   ஓதுவார் பாரம்பரியத்தைச் சேர்ந்த முத்து கந்தசாமி தேசிகர் ->  கடம் கலைஞர் - சுகன்யா இராமகோபால்
இசை வல்லுனர் விருது டி.எஸ். சத்தியவதி
பப்பு வெங்கடராமையா விருது திருவள்ளூர் பார்த்தசாரதி  
  • ஜனவரி 3, 2018 இல் நடக்கும் நாட்டிய விழாவில் பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதனுக்கு நாட்டியத்துக்கான "நிருத்ய கலாநிதி விருது" வழங்கப்படுகிறது.
சங்கீத கலாநிதி
  • கர்நாடக இசையில்            சிறந்து  விளங்கும்            கலைஞர்களுக்கு              மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.    இதில் மிக உயரிய விருதாக கருதப்படுவது "சங்கீத கலாநிதி" விருது ஆகும். சங்கீத என்பதற்கு "இசை" என்றும் கலாநிதி என்பதற்கு பெருஞ்செல்வம் என்பதும் பொருள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்