சங்கீத கலாநிதி விருதுகள் 2020-22
May 29 , 2022
786 days
548
- மதராஸ் சங்கீத அகாடமி இந்த விருதுகளை அறிவித்தது.
- சந்தான கோபாலன் 2020 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதைப் பெற உள்ளார்.
- பக்தவத்சலம் 2021 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதிற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி விஜயலட்சுமி ஆகியோர் 2022 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதைப் பெற உள்ளனர்.
- 2020 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலா ஆச்சார்யா விருதிற்கு நாதஸ்வர கலைஞர் கீழ் வேளூர் G.கணேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2021 ஆம் ஆண்டிற்கான விருதிற்குப் பாடகரும் இசையமைப்பாளருமான ரீத்தா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இசையமைப்பாளர் வைனிகா R.S.ஜெயலட்சுமி 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2020 ஆம் ஆண்டிற்கான TTK விருது பாடகர் தாமரக்காடு கோவிந்தன் நம்பூதிரிக்கு வழங்கப் பட உள்ளது.
- மிருதங்கம் மற்றும் ஜலதரங்கம் கலைஞர் நேமணி சோமயாஜுலு 2021 ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற உள்ளார்.
- கஞ்சிரா கலைஞர் A.V.ஆனந்த் 2022 ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற உள்ளார்.
- 2022 ஆம் ஆண்டிற்கான இசைக்கலைஞர் விருதானது V.பிரேமலதாவுக்கு வழங்கப்பட உள்ளது.
- நிருத்ய கலாநிதி விருது பெறுபவர்கள் ராம வைத்தியநாதன் (2020), நர்த்தகி நடராஜ் (2021) மற்றும் பிரகா பெஸ்ஸல் (2022) ஆகியோர் ஆவர்.
Post Views:
548