TNPSC Thervupettagam

சங்கீத நாடக அகாடமி விருதுகள் 2022 மற்றும் 2023

March 10 , 2024 289 days 462 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், சமீபத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான 94 சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார்.
  • இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள் உள்ளிட்ட நிகழ்த்து கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான அகாடமி விருதுகளை இசைத் துறையில் 12 பேரும், நடனத் துறையில் 12 பேரும், நாடகத் துறையில் 9 பேரும், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகளில் 11 பேரும் பெற்றுள்ளனர்.
  • இந்த விருது பெற்ற சில புகழ்பெற்ற கலைஞர்கள்
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக சங்கீத பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்,
    • கர்நாடக இசைக் கருவி (மிருதங்கம்) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலி நாராயணன்,
    • பரதநாட்டியம் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊர்மிளா சத்தியநாராயணன் மற்றும்
    • மோகினியாட்டம் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த பல்லவி கிருஷ்ணன்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் 6 சிறந்த கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி அங்கத்தினர் அந்தஸ்தையும் வழங்கினார்.
    • விநாயக் கேடேகர், கோவா, இந்திய இசைக்கலை
    • R. விஸ்வேஸ்வரன், கர்நாடகா, இந்திய இசைக்கலை
    • சுனயனா ஹசாரிலால், மகாராஷ்டிரா, இந்திய நடனக்கலை
    • ராஜா & ராதா ரெட்டி, டெல்லி, இந்திய நடனக்கலை
    • துலால் ராய், அசாம், இந்திய நாடகக்கலை
    • T.P. சின்ஹா, உத்தரப் பிரதேசம், இந்திய நாடகக்கலை
  • சங்கீத நாடக அகாடமி அங்கத்தினர் அந்தஸ்து அல்லது "அகாடமி ரத்னா" என்பது நிகழ்த்து கலை வடிவங்களில், கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஒரு மிக உயரிய கௌரவம் ஆகும்.
  • இந்த உறுப்பினர் அந்தஸ்து 40 ஆக வரையறுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்