சங்க்'கே-7 ஆய்வுத் திட்டத்திற்கான அறிவியல் பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்கி வழங்குவதற்கான சர்வதேசப் பங்குதார நாடுகளாக எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சீனாவுடன் இணைந்துள்ளன.
சீனாவின் இந்த நிலவு ஆய்வுத் திட்டமானது, 2026 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் உறைபனியைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
சீன நாட்டுப் பொறியாளர்களின் உதவியுடன் எகிப்து மற்றும் பஹ்ரைன் இணைந்து உருவாக்கும உயர் தெளிவு திறன் நிறமாலை ஆய்வு ஒளிப்படக் கருவியானது, சங்க்'கே-7 நிலவு ஆய்வுத் திட்டத்திற்காக CNSA நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சர்வதேச விண்கல சாதனங்களில் ஒன்றாகும்.
இந்த ஒளிப்படக் கருவியானது சுற்றுப்பாதையில் இருந்த படியே நிலவின் துருவப் பகுதிகள் உட்பட, நிலவின் மேற்பரப்பு அமைப்புகளைப் படம் பிடித்து பகுப்பாய்வு செய்யும்.