TNPSC Thervupettagam
May 15 , 2021 1200 days 559 0
  • சீனா சமீபத்தில் தனது சிச்சாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து சாங்சே 2C என்ற ராக்கெட்டினை விண்ணில் ஏவி உள்ளது.
  • இது யோகன் என்ற வகை செயற்கைக் கோளாகும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு விண்ணில் ஏவப்பட்ட ஏழு செயற்கைக் கோள்களின் குழுவுடன் அவற்றின் சுற்றுப் பாதையில் இணைந்தது.
  • இந்தச் செயற்கைக் கோளானது மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பச் சோதனைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப் படும்.

யோகன் செயற்கைக்கோள்

  • இது சீனாவின் கண்காணிப்பு செயற்கைக்கோளில் ஒன்றாகும்.
  • கண்காணிப்புச் செயற்கைக் கோளானது இராணுவ (அ) உளவுத் துறைப் பயன்பாட்டிற்காக அனுப்பப் படும் ஒரு உளவு செயற்கைக் கோளாகும்.
  • இருப்பினும், நில அளவீடு, பயிர் உற்பத்தி மதிப்பீடு, அறிவியல் சோதனைகள் மற்றும் பேரிடர் கண்காணிப்புப் பணி போன்றவற்றிற்காக யோகன் செயற்கைக்கோள்கள் அனுப்பப் பட்டதாக சீனா கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்