TNPSC Thervupettagam
May 18 , 2019 1899 days 663 0
  • பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகமானது (United Nations Office for Disaster Risk Reduction - UNDRR) பேரிடர் அபாயக் குறைப்பிற்காக 2019 ஆம் ஆண்டின் “சசகாவா விருதினை” பிரமோத் குமார் மிஸ்ரா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிக்கு வழங்கி கௌரவித்தது.
  • இவர் பிரதம மந்திரியின் கூடுதல் முதன்மைச் செயலாளராக உள்ளார்.
  • இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சர்வதேசத் தளச் சந்திப்பின் 6-வது பதிப்பின் போது அறிவிக்கப்பட்டது.
  • பேரிடர் அபாய மேலாண்மையில் ஐக்கிய நாடுகளின் மிகவும் புகழ்பெற்ற விருது இதுவாகும்.
  • 1989 ஆம் ஆண்டில் UNDRR மற்றும் நிப்பான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த விருதினை ஏற்படுத்தின.
  • 2019 ஆம் ஆண்டின் “சசகாவா விருதின்” கருத்துருவானது, “அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான சமுதாயங்களைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
  • இதன் இதர வெற்றியாளர்கள்
சிட்னேய் புர்டாடோ சிவில் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், காம்பினாஸ், பிரேசில்
பிஜல் பிரகம்பட் இந்திய மகிளா வீட்டுவசதி சேவா அறக்கட்டளையின் இயக்குநர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்