- இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சச்சாரின் என்ற பொருளின் மீது எதிர்க் குவிப்புத் தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது.
- இந்த வரியானது அரசினால் இரத்து செய்யப்படவில்லை எனில் 5 ஆண்டு காலத்திற்கு இதே நிலை நீடிக்கும்.
- சச்சாரின் என்பது ஊட்டச் சத்து அற்ற ஒரு இனிப்பு சுவையூட்டியாகும்.
- இது கரும்புச் சர்க்கரைக்கு மாற்றாக கலோரி குறைந்த இனிப்பு சுவையூட்டியாகக் கருதப்படுகின்றது.
- இது பின்வரும் பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
- உணவு மற்றும் பானம்
- சுய நலன் சார்ந்த பொருட்கள்
- இனிப்பு சுவையூட்டிகள்
- மின்முலாம் பூசுதலை மிளிரச் செய்பவை
- மருத்துவப் பொருட்கள்
எதிர்க் குவிப்புத் தடுப்பு வரி
- ஒரு பொருளின் எப்பொழுதும் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அந்தப் பொருளானது ஏற்றுமதி செய்யப்பட்டால் அது குவிப்பு என்று அழைக்கப்படும்.
- இது ஒரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.
- இது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு பரவலான விளைவை ஏற்படுத்துகின்றது. இது உள்நாட்டு வர்த்தகத்தையும் பாதிக்கின்றது.
- எதிர்க் குவிப்பு என்பது இந்தச் சூழ்நிலையை சரி செய்து நியாயமான வர்த்தகத்தை ஏற்படுத்தும் ஒரு முறையாகும்.
- எதிர்க் குவிப்பு முறையினை நியாயமான போட்டியின் கருவியாகப் பயன்படுத்தப்படுதலானது உலக வர்த்தக நிறுவனத்தினால் அனுமதிக்கப்படுகின்றது.