TNPSC Thervupettagam

சட்கோசியா வனவிலங்குச் சரணாலயத்தில் இந்திய மீன் கொத்திகள்

April 29 , 2023 448 days 199 0
  • ஓடிசாவின் சட்கோசியா வனவிலங்குச் சரணாலயத்தில் முதன்முறையாக இந்திய மீன் கொத்தி வகை (நீர் கிழிப்பான்) பறவைகளின் இனப்பெருக்கம் மேற்கொள்ளப் படச் செய்வதற்கான தடயங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • இவை வழக்கமாக நவம்பர் மாதத்தில் சட்கோசியாவிற்கு வந்து பின்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அங்கு இருந்து வெளியேறுகின்றன.
  • இவை இந்தியா, வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
  • முன்னதாக இந்தியாவில் இவற்றின் இனப்பெருக்கம் கடைசியாக பல ஆண்டுகளுக்கு முன் மகாநதி ஆற்றுப் பகுதியின் முண்டுலி பகுதியில் பதிவு செய்யப் பட்டது.
  • வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் மீன் கொத்திகளின் எண்ணிக்கையானது முறையே 3,000 முதல் 3,500 வரை உள்ளதாக சமீபத்தியப் பல்வேறு ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்